எழுபது வயசு கிழவனுக்கு கல்யாண ஆசை வரும்போது நம்ம சூரி ஆசைப்படுறதில் என்ன தப்பு?
எம்பிட்டு நாளைக்கு பபூனாவே வேஷம் கட்டுறது, நாமும் ராஜபார்ட் வேஷம் கட்டுனா ஜனங்க கண்ணை மூடிக்க போறாங்களா?
காமடியன் சூரிக்கு கதாநாயகனாகும் ஆசை வந்திருக்கு.
அண்மையில் வெளியான சந்தானத்தின் ஏ ஒன் சக்க போடு போடுவதைப் பார்த்துவிட்டு அந்த ஆசை வந்ததாங்கிறதெல்லாம் தெரியாது. அவரும் ஹீரோவாகிறார்.
எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.வெற்றிமாறன் இயக்குகிறார்.
ஹீரோவா நடிக்கமாட்டேன்னு சொன்னவர்தானே சூரி?
“ஆமாங்க அப்படித்தான் சொன்னேன்.அதில மாத்தமில்ல. நெறய பேர் கேட்டாங்க. மாட்டேன்னுதான் சொன்னேன்.அது உண்மைதான்.
திடீர்னு ஒரு நா ராத்திரி வெற்றிமாறன் போன் பண்ணினாரு என் படத்தில நீதான் ஹீரோன்னார். அதிர்ச்சியாபோச்சு. அவர் மேல இருந்த மரியாதைனால மறு பேச்சு பேச முடியல. இவ்வளவுதான் எனக்கு தெரியும். யாரு ஹீரோயின்லாம் நான் கேட்டுக்கல.வெயிட் பண்ணிட்டிருக்கேன்”என்கிறார் சூரி.
தப்பில்ல.வாங்க .நாங்களும் வெயிட் பண்றோம்