கதை இயக்கம் ; பரத் கம்மா,இசை; ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு; சுஜித் சாரங்.
விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகா,சாருஹாசன்,
**************
ஸ்டூடண்ட்ஸ் யூனியன் ரூட்டு தலை தான் விஜய் தேவரகொண்டா. மாணவர்களுக்கு அநியாயம்னா பொங்கிடுவார். முன் கோபி, முரட்டுக்குணம்.ஒரு விபத்தில் ராஷ்மிகாவை சந்திக்கிறார் .காதல் அரும்புகிறது. ராஷ்மிகா கல்லூரி கிரிக்கெட்டர். கல்லூரி மாணவர்களை லோகல் ஆட்கள் கைவைக்க விஜய்க்கு கோபம் வருகிறது. பொளக்கிறார். இதனால் உயிருக்கு ஆபத்து .தாத்தா சாருஹாசனின் அறிவுரைப்படி உண்மையான காம்ரேட் ஆவதற்காக சப்தம் பற்றிய ஆய்வு செய்வதற்காக மாநிலம் கடந்து காஷ்மீர் வரை செல்கிறார்.பலமாநில மக்களின் வாழ்க்கை நிலை புரிகிறது.
ராஷ்மிகாவுக்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் என்ன நடக்கிறது, காதல் என்னவாகிறது என்பதையெல்லாம் கிட்டத்தட்ட நமது இடுப்பு ஒடியும் வரை நேரம் எடுத்துக் கொண்டு சொல்கிறார்கள்.
இந்த மாதிரியான கதைகளை எண்பதுகளில் நாம் பார்த்திருக்கிறோம்.
இது டப்பிங் படம் என்பதால் காக்கிநாடா என்பதை தூத்துக்குடி என மாற்றிஅங்கு என்டிஆர் சிலை இருப்பதாக காட்டுகிறார்கள்.
நீளமான கதை என்றாலும் விஜய்-ராஷ்மிகாவின் நடிப்பு ஆறுதலாக இருக்கிறது. அவர்களது காதலில் உயிர்ப்பு இருக்கிறது.அதன் உச்சமான லிப் லாக் இருக்கிறது. சண்டை காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்திருக்கிறார். ஆனால் இதுமட்டுமே டியர் காம்ரேடுக்கு போதுமா?
கிரிக்கெட்டில் உயரம் போகணும்னா என் கூட ஒரு நாள் படுக்கணும் ரெடியா என்று கேட்கும் மீ டூ விவகாரமும் கதையில் இருக்கிறது.
கதையில் வேகம் இல்லை. ஒளிப்பதிவு அற்புதம். ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.
படம் மனதைக் கவரவில்லை.
சினிமாமுரசத்தின் மார்க் 2/ 5