இசைத் துறையில் புரிந்து வரும் சாதனைகளுக்காக மதுரை காமராசர், அண்ணா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து நான்கு டாக்டர் பட்டங்களை இசைஞானி இளையராஜா பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ஐந்தாவது டாக்டர் பட்டத்தை, குண்டூரில் உள்ள ‘விக்னான்’ என்ற தனியார் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார்.
விக்னான் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டது.