பிக்பாஸில் இருக்க வேண்டிய நடிகை கங்கனா ரனாவத்.
ஆயிரம் மிதுன்கள் பத்தாது. கசக்கி கக்கத்தில் வைத்துப் பிழிந்து விடுவார்.
பத்திரிகையாளர்களையே படுத்தி எடுக்கும் இந்த சொர்ணக்கா தான் ஜெயலலிதாவாக நடிக்க இருக்கிறார்.
ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி ஆளாளுக்கு ஆட்களை அடிப்பது, உதைப்பது, வதைப்பது பற்றி 49 பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கையெழுத்திட்டு கடிதம் எழுதினார்கள். அவர்களில் இயக்குநர் மணிரத்னமும் ஒருவர்.
சட்டம் ஒழுங்கு சிதைகிறது என்கிற தங்களின் பயத்தை அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவ்வளவுதான் இந்த செய்தியைப் பார்த்ததுமே பாரதிய ஜனதா ,இந்து மத அபிமானிகள் 62 பேர் சேர்ந்து மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்கள்.
“நக்சல் தாக்குதல்கள், பயங்கரவாத தாக்குதல்கள், காஷ்மீர் அராஜகங்கள் பற்றி கவலைப்படாத ( ! ) இந்த பிரமுகர்கள் அரசியல் உள்நோக்கமுடன் எழுதி இருக்கிறார்கள்.”என்பதாக எழுதி இருக்கிறார்கள்.
இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களில் ஒருவர்தான் நடிகை கங்கனா ரனாவத்,