நடிகை திரிசா-வருண் மணியன் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்ற பிறகுமுறிந்தது இதையடுத்து திரிசாவும் வழக்கம் போல புதிய படங்களில் நடித்து வருகிறார்.. இந்நிலையில் மீண்டும் தெலுங்கு நடிகர் ரானாவுடன் காதல் என் கிசுகிசு கிளம்பியுள்ளது. இது குறித்து திரிஷாவிடம் கேட்ட போது,ராணாவை நான் காதலிக்க வில்லை அவருடன் இருப்பது நட்பு மட்டுமே என்றவரிடம் மீண்டும் உங்கள் வாழ்கையில் காதலுக்கு இடம் உண்டா? என்று கேட்ட போது, ‘ஏன் தாரளமாக!, எனக்கு யாரையாவது பிடித்தால் காதலிப்பேன், அவரையே திருமணம் செய்துக்கொள்வேன். ஆனால், சமுதாயத்திற்காகவும், என் வயதிற்காகவும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், எனக்கு எப்போது தோன்றுகின்றதோ அப்போது தான் திருமணம்’ என கூறியுள்ளார்.