பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கி இருக்கிற திரைப்படம் மயூரன், இவருக்கு முதல் படமே காதல் நெருக்கடியில் மூச்சு திணறுகிறது.
வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிற படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைத்தால் நாயகியின் அம்மா முட்டுக்கட்டை போடுகிறாராம் ,
“அந்த ஹீரோ வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப முடியாது”என்று அம்மா முட்டுக்கட்டையாக இருக்கிறார்,.
“தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் “என்ரு காரணம் சொல்கிறார். அடப்பாவமே !
கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார்
இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்
படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு.
அத்திவரதரை ஒருவாட்டி தரிசனம் பண்ணிட்டு வாங்களேன் ,பரிகாரம் கிடைக்கும். இதுதான் நமது அட்வைஸ்.!