மதத்தின் பெயரால் நாட்டில் நடக்கும் வன்முறைகளைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு அறிஞர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
குறிப்பாக “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்டு நடக்கும் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்திருந்தார்கள். இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர் மணி ரத்னமும் ஒருவர்.
இந்த கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திடவில்லை அது போர்ஜரி என பாஜக ஆதரவு ஆங்கில நாளேடுகளில் செய்தி வெளியாகி இருந்தது.
தமிழ்நாட்டு பாஜக பிரமுகர் எச்.ராஜாவும் அத்தகைய கருத்தை வெளியிட்டிருந்தார்.
மணிரத்னம் கையெழுத்திடவில்லையா என சுகாசினி மணிரத்னத்திடம் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் .
“அதற்கு கையெழுத்திடவில்லை என சொல்வது தவறு. தயவு செய்து போலியான விளக்கங்களை விட்டு விலகி இருங்கள் “என்று பதில் அளித்துள்ளார் சுகாசினி
பாஜக ஆதரவாளர்களுக்கு கன்னத்தில் அறைந்த மாதிரி இருக்கிறது அந்த விளக்கம்.