தியா மிர்சாவும் ஷாகிலும் ஐந்து ஆண்டுகால திருமணம் 11 ஆண்டுகால காதலர்கள் என்கிற பெருமையுடன் வாழ்ந்து வந்த பாலிவுட் பிரபலங்கள்.
திடீரென “நாங்கள் இருவரும் திருமண பந்தத்தை முறித்துக் கொண்டோம்.இனி நண்பர்களாகவே இருப்போம்” என இருவரும் சேர்ந்தே அறிவித்தார்கள்.
என்ன நேர்ந்தது இவர்களது காதல் கல்யாண வாழ்க்கையில்?
பாலிவுட் வருத்தப்பட்டது.
கடந்த மாதம் கூட வெளிநாட்டில் பனிக்கட்டிகளை வீசிக் கொண்டு விளையாடினார்களே..எதற்காக இந்த முடிவு எடுத்தார்கள்?
பூனைக்குட்டியை எவ்வளவு நாள் மடியில் மறைத்து வைத்துக் கொள்ள முடியும்?
எல்லாம் ஒரு மாத இடைவெளியில் நடந்திருக்கிறது.
ஷாகில் ஒரு படத்தயாரிப்பில் இருந்தபோது தியா வேறொரு படத்தில் இருந்தார்.
இந்த நேரத்தில்தான் ஷாகில் திரைப்பட எழுத்தாள பெண்மணியும் பிரகாஷ் கோவலின் மனைவியுமான கனிகாவுடன் நட்பினை வளர்த்துக் கொள்ள ,தியா சக நடிகர் மோகித் ரைனாவுடன் நட்பை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆக அந்த நட்பின் வளர்ச்சி தியா-ஷாகில் மண வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டது.
இவர்கள் பரஸ்பர விவாகரத்து ரத்து செய்த அடுத்த சில நாட்களில் கனிகா-பிரகாஷ் கோவல் விவாக ரத்து அறிவிப்பும் வந்து விட்டது.
அந்த இரண்டு ஜோடியின் படத்தைத்தான் இங்கு பார்க்கிறீர்கள்.
தியா -ஷாகில் இடது ஓரம், கனிகா -பிரகாஷ் வலது கீழே.