கதை இயக்கம் ; மாரிமுத்து, ஒளிப்பதிவு ;குமார் ஸ்ரீ தர்.
அழகு, சமன் மித்ரு,சத்யகலா,
*******************
உயரத்தில் இருக்கும் இலை,தழைகள்,காய்கள்,பழங்களைப் பறிப்பதற்கு கிராமங்களில் பயன்படுத்துவதுதான் தொரட்டி. பொதுவாக ஆடு மாடுகளை மேய்ப்பவர்கள் வைத்திருப்பார்கள். இந்த தொரட்டியை வைத்து நல்ல கதையை உருவாக்கி இருக்கிறார் மாரிமுத்து.
செல்வாக்குள்ள நடிகர்கள் இல்லாததால் முக்கியத்துவம் கிடைக்கவில்லை இந்த நல்ல படத்துக்கு.!
ஆட்டுக் கிடை போட்டு பிழைக்கிற அழகு குடும்பம் அந்த கிராமத்துக்கு வந்து கிடை போடுகிறது. தூரத்து உறவினர் உதவுகிறார். இவருக்கு ஒரு பெண். அழகுக்கு ஒரு பையன். இவர்கள்தான் ஜோடி ஆகப் போகிறார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.
ஆனால் அவர்களது சந்தோஷ வாழ்க்கைக்கு எப்படியெல்லாம் ஆபத்து வந்து சேரும் என்பதை ஊகிக்க முடியவில்லை.அந்த அளவுக்கு திரைக்கதை அமைந்திருக்கிறது. ஆனால் மூன்று மோசமான திருடர்களைப் பற்றி மாயன் கேரக்டரால் உணர முடியவில்லை என்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. குடிப்பழக்கத்துக்கு அடிமையானால் எத்தகைய இழப்புகள் ஏற்படும் என்பதை அழுத்தமுடன் இயக்குநர் சொல்லி இருக்கிறார்.
தமிழக அரசு விருது வழங்கி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டிய படம்.
ஸ்டண்ட் மேன் அழகுக்கு இந்த படத்தில் சிறப்பான வேடம். மனதை தொடுகிறார். சத்ய கலாவின் காதலில் கற்பு இருக்கிறது. சிறந்த நடிகை.கணவனை எப்படி திருத்துவது என்பதை கற்றுக் கொள்ளலாம் .
சமன் மித்ரு .மற்ற களவாணி மூவரை பாராட்டலாம்.
நல்ல படம். விருது வழங்கலாம்