ஜெயம் ரவி நடித்திருக்கிற படம் கோமாளி.!
இந்த கோமாளிக்கு அர்த்தமே வேற. பதினாறு வருஷமாக கோமாவில் கிடந்த ஒரு வாலிபனின் கதை,
இதன் முன்னோட்ட விழா நடந்தது.
இந்த படத்தைத் தயாரித்திருப்பவர் பிரபல கல்வியாளரும் நடிகர் சங்கப் பிரச்னையின் பிதாமகனும் ஆவார் .ஐசரி கணேஷ்.!
இவரது தயாரிப்பில் வரிசையாக படங்கள் . எல்.கே.ஜி.யை வெற்றிப் படமாக்கிய சக்திவேலன்தான் இவரது படங்களின் மொத்த விநியோகஸ்தர்.
இந்த கோமாளியின் முன்னோட்டத்தில் ஒரு சீன் வருகிறது.
கோமாவில் இருந்து எழுந்த ஜெயம் ரவிக்கு கால மாற்றத்தின் விளைவுகள் தெரிகிறது.தன்னை கண்ணாடியில் பார்த்து திகைத்துப் போகிறார். கடுமையான அதிர்ச்சி.
இவரது உற்ற நண்பரான யோகிபாபு ஆறுதலுடன் “பதினாறு வருசமாக கோமாவில் இருந்த! இப்ப 2016 !வேணும்னா நீயே பாரு “என்று அங்கிருந்த டி.வி.யை ஆன் பண்ண ரஜினி பேசுகிற காட்சி .
“அரசியலுக்கு வருவேன்!”
ஜெயம் ரவிக்கு மேலும் அதிர்ச்சி. “இல்ல .இது நெய்ண்டி சிக்ஸ்! யார ஏமாத்தப் பாக்கிறிங்க ” என்கிற ரேஞ்சுக்கு சொல்ல மொத்த தியேட்டரும் அதிருது.
தயாரிப்பாளர் ஐசரிக்கு அச்சம். “நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள்பா! வெட்டி விட்ராதீங்கப்பா!”என்றதும்அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஓடி வந்து “அப்படியெல்லாம் இல்ல சார்! அவர் அரசியலுக்கு வரணும்கிறதுக்காக அந்த சீனை வச்சிருக்கேன்.நான் அவரது ரசிகன்” என்று விளக்கம் சொன்னார்.
“அப்படின்னா இத நான் ரஜினிசார்ட்ட சொல்லிடுறேன்”என ஆறுதலுடன் இருப்பிடம் சென்று அமர்ந்தார் ஐசரி.! இந்த படத்தில் யோகிபாபு மிகவும் வித்தியாசமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்த மாற்றம்.
கோமாளி ட்ரைலர் ……