திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸுக்கு தயாராக இருந்தும், ஈராஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட பணப்பிரச்சனை காரணமாக ‘சிக்கலில்’ தவித்தது. .இந்நிலையில் ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பெரும் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்துவிட்டதாகவும், இதனால் ‘ரஜினி முருகன்’ திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.என்றாலும், தீபாவளிக்கு உலக நாயகனின் ‘தூங்காவனம்’ மற்றும் அஜித்தின் ‘வேதாளம்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாகவுள்ளதால் ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் நவம்பர் 27ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.