- என் நண்பனே!
- என்னை ஏய்த்தாய் ,
- என் பாவமாய் வந்து வாய்த்தாய்,
- நல்லவர்கள் யாரோதீயவர்கள் யாரோ
- கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே!
இது யாருக்குப் பொருந்துகிறதோ,இல்லையோ நடிகை ஆண்ட்ரியாவுக்குப் பொருந்திப் போகிறது.
தவறான கணிப்பு, கூடா நட்பு, பார்ட்டி கலாசாரம் இதெல்லாம் எங்கு போய் முடியும் என்பதை ஓரளவுக்கு உணர்த்திய படம்தான் நேர்கொண்ட பார்வை.
அதற்கு உதாரணமாக நடிகை ஆண்ட்ரியாவை சொல்லலாம்.
இது வேறு வகையான பாதை.
அண்மையில் பெங்களூருவில் ஒரு கவி அரங்கில் ஆண்ட்ரியா கவிதைகள் வாசித்தார்.
எல்லாமே சோகம்.
ஏனிந்த சோகம் ஆண்ட்ரியா?
“திருமணமான ஆண் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தேன்.அது எனது வாழ்க்கையின் இருண்ட காலம் என்பதால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தேன்” என்றார்.
உண்மைதான்!
மனவலி.அழுத்தம்.அதனால் உடல் நலம் பாதிப்பு.
ஆயூர்வேத சிகிச்சை.தற்போது முழுமையாக மீண்டுவிட்டார் .