நேற்றைய பிக்பாஸில் அடிமைகள் தினம் அமர்க்களமாக அனுசரிக்கப்பட்டது! நமக்கென்னவோ அது வேறு ஒரு காட்சியாக கற்பனையில் விரிந்தது.
எக்சிகியூட்டிவ் ஆசனத்தில் கம்பீரமாக கஸ்தூரி ராணியார் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த காட்சியைக் காண கண் கோடி வேண்டுமய்யா.!
நேற்றுதான் பிக்பாஸில் நுழைந்தார். நுழைந்ததுமே பிக்பாஸார் முடி சூடி விட்டார் கஸ்தூரிக்கு.!யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம் .
கஸ்தூரிக்கு எதிரில் பவ்யம்,பணிவு அடக்கமுடன் சேரன் தனது தலைமைப் பதவிக்குரிய தகுதிகளை ராணியாரிடம் சொல்கிறார். இந்த அடிமைகளுக்குத் தலைவனானால் இன்னின்ன நன்மைகளைச் செய்வேன் என்று கஸ்தூரியாரிடம் சொல்கிறார்.
அவரும் மேலும் இருவரது விண்ணப்பங்களைக் கேட்டுவிட்டு மாண்பு மிகு பிக் பாஸ் சாரிடம் “மூவருமே தகுதியானவர்கள்தான்’ என பரிந்துரைக்கிறார்.
இனி என்னதான் சேரன் அங்கு அவமானப்பட்டாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை.!
தன்மானம் தலை கவிழ்ந்து நிற்கிறது.