தேசிய அவார்டு இன்று மாலை அறிவிக்கப் பட்டது .
‘மாநில அளவிலான தேர்வில் ‘பாரம்’ என்கிற தமிழ்ப் படத்துக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மகிழ்ச்சி.!
மேற்குத் தொடர்ச்சி மலை என்கிற படத்துக்கு விருது கிடைக்கும் என்பதாக நினைத்திருந்தோம். மரியாதைக்குரிய தேர்வுக்குழுவினருக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மூலிகைக் காற்றின் குணம் தெரியவில்லை. வாடைக் காற்றில் வாழ்ந்தவர்கள் அல்லவா!
மேற்குத் தொடர்ச்சி மலையைப் பார்த்த விமர்சகர்கள் “இந்தப் படத்துக்கு விருதுகள் அளிக்கப்பட வில்லை என்றால் அது மாற்றாந்தாய் மனப்பான்மை என்றே கருத வேண்டும்” என அன்றே பெரும்பாலான கருத்துத் தெரிவித்திருந்தனர்.
அது நடந்திருக்கிறது.
ஒரு சுமைக் கூலியின் வாழ்க்கை, அவனது எதிர்காலக் கனவு எல்லாமே அந்த படத்தில் குருதியால் எழுதப்பட்டிருந்தது. ஆனால் எல்லாமே கானல் நீராய் போனது. விளை நிலத்தில் பயிர்கள் வளர்வதற்குப் பதிலாக காற்றாலைகள்தான் முளைக்கப் போகின்றன என்பதை காட்டியிருந்தார்கள். அதனால்தான் விருது வழங்கப்படவில்லையோ!
இருக்கலாம் !கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கருத்துகளை சொன்னதால் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு தேசிய விருது கிடைக்கவில்லை .
இனிமேல் எடப்பாடி அரசு விருதுகளுக்காக காக்கா பிடிக்கவேண்டியதுதான்!
கலைமாமணி விருதுகளை வாரி, வாரி வழங்குவதைப் போல வழங்கி விடுவார்கள்.