ரொம்பப்பேர் பாரம் படத்தைப் பார்த்திருக்க முடியாது.
தியேட்டருக்கு வந்திருந்தால் தானே பார்க்கிறதுக்கு?
அந்தப் படத்துக்கு நேஷனல் விருது.!
பெருமையாக இருக்கு.
நடிகர் நடிகையர் யார்னு தெரியாது.. இயக்குநர் பெயர் மட்டும் பிரியா கிருஷ்ணசாமி என்பது தெரியும். அரசு அறிவிப்பில் இருந்தது.
கதை என்ன ? எங்கோ சில கிராமங்களில் தலைக்குத்தல் என்கிற பழக்கம் இருக்கிறதாம்.
அதென்ன தலைக்குத்தல்?
மேலுக்கு முடியாமல் கிடக்கிற வயசானவங்களை கொல்ற பழக்கத்துக்குப் பேருதான் தலைக்குத்தல்.
வயசான நைட் வாட்ச்மேன் பற்றிய கதை. மகனே கொல்கிறான்.!
ஒரு விபத்தில் இடுப்பில் அடிபட்டு கிடக்கிற தந்தை கருப்பசாமியை மகனே கொன்று விட்டதாக ஒரு பெண் குற்றம் சாடுவதைப் போல கதை அமைந்திருக்கிறது.