பாராட்டுகள் பலவிதம்.
உள்ளத்தில் இருந்து வருவது, உதட்டில் பிறப்பது என இருவகை.
உதட்டில் பிறப்பதில் உண்மை இருக்காது..அதில் வஞ்சகம் மறைந்திருக்கலாம்.
ஆனால் அதிகம் பழகியிருக்காதவர்கள் ,படங்களில் கூட பார்த்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தவர்கள் ஒருவரின் திறமையைப் பார்த்த பிறகு பாராட்டுவது நாடகமாக இருக்க முடியாது.
அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
மெல்போர்னில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் இந்தி நடிகர் ஷாருக் கான் கலந்து கொண்டிருந்தார்.
மக்கள் செல்வன் விஜய சேதுபதி,இயக்குநர் தியாகராஜா குமாரராஜா ஆகியோரும் சென்றிருந்தனர். விஜயசேதுபதி திருநங்கையாக நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் படம் அங்கு திரையிடப்பட்டது.
படத்தைப் பார்த்த ஷாருக் பிரமித்துப் போய் “என்னுடைய வாழ்நாளில் விஜயசேதுபதியைப் போல ஒருவரைப் பார்த்ததில்லை”என பாராட்டி மகிழ்ந்தார்.
இந்த மனப்பான்மை கோலிவுட்டில் எத்தனை பேருக்கு இருக்கும்?