மேகி படத்தைத் தயாரிப்பது சனம் ஷெட்டி.
இந்த படத்தில் பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடிக்கிறார் .மேகாலயாவைச் சேர்ந்த பெண் நாயகியாக நடிக்கிறார்.
இந்த படம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாத்திமா பாபு “தன்னுடைய வீட்டில் தர்ஷனை எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் அவன் பிக்பாசில் இருந்து வெளியே வந்ததும் மகனாக தத்து எடுக்கப்போகிறேன்” என்றார். உண்மையாகவா பா.பாபு?சும்மா ரீலா?
சனம் ஷெட்டி பேசும்போது..
இப்படத்தின் முக்கிய சராம்சம்.. சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி’ இருக்கும் என்பதால் இப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார்.
அவர் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படிப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும்.
மேலும், பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படி தான் இருந்தார். எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். கதைப்படி கதாநாயகி மேகாலயாவைச் சேர்ந்த பெண் என்பதால் அங்கு படப்படிப்பு நடத்தினோம். என்றார்.