நடிகை சிம்ரனின் கணவரும், சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளருமான தீபக் பாகா, “சிம்ரன் & சன்ஸ்” (Simran & Sons) எனும் பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரப்படங்களை இயக்கிய கௌரிசங்கர் இயக்க உள்ள இந்த புதிய படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.தனது புதிய படத்தின் பெயர், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் தீபக் பாகா.