ரஜினி: காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது”!
விஜய்சேதுபதி : இது ஜனநாயகத்திற்கு எதிரானது!
நடிகர் விஜய் சேதுபதி, மெல்போர்னில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்படவிழாவில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
அவர் அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு, ‘காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து’ விவகாரம் குறித்து, மத்திய அரசு அக்கறை செலுத்தலாம், ஆளுமை செலுத்தக் கூடாது என பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
காஷ்மீர் பிரிப்பு விவகாரம் குறித்து உங்கள் கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன?என்ற கேள்விக்கு விஜய்சேதுபதி கூறியுள்ளதாவது,
“இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பெரியார் அன்றே சொல்லியிருக்கிறார்.அவங்கவங்க பிரச்சனையில், அந்தந்த மக்களே தான் முடிவெடுக்கணும்னு.
நான் உங்க வீட்டு விசயத்துல வந்து தலையிட முடியுமா? நீங்க தான் அந்த வீட்டுல வாழறீங்க, உங்களுக்கு தான் தெரியும், அந்த வீட்டின் மாத பட்ஜெட் என்ன?, உங்க குழந்தைகளுக்கு என்னென்ன தேவை?, அன்னைக்கு எப்படி வாழப்போறோம்னு .
இது உங்களுக்கு தான் தெரியுமே ஒழிய, எனக்கு தெரியாது. நான் உங்க மேல அக்கறை செலுத்தலாம். ஆனால்,ஆளுமை செலுத்த முடியாது.ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.அது மாதிரி தான். எல்லா இடத்திலும் சரி, வெளிய இருக்கிறவங்க அக்கறை செலுத்தலாம் .உள்ளே வந்து உங்க கருத்தை சொல்லவே முடியாது.
கேள்விப்பட்ட விஷயத்தை வச்சு சொல்றோமே ஒழிய, அங்கே வாழ்றவங்களுக்கு தான் தெரியும், அங்கே என்ன நடக்குதுன்னு. இது முழுக்க, முழுக்க மன வருத்தத்தை அளிக்குது. காலையில் ஒரு செய்தியை பார்த்தேன். நான் வீ ட்டுச் சிறையில் இருக்கிறேன் என்று ஒரு செய்தியை பார்த்தேன்.ஸோ, இது எல்லாத்தையும் சேர்த்து, மறுபடியும் பெரியார் சொன்னதைத்தான் சொல்றேன்.
அவங்கவங்க பிரச்சனையை அவங்கவங்க தான் பார்த்துக்கணும்னு. அக்கறை தான் செலுத்தணும், ஆளுமை செலுத்த கூடாது”இவ்வாறு அவர் கூறியுள்ளார்
.இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்,“மோடியும் அமித்ஷாவும் அர்ஜுனன்,கிருஷ்ணன் போன்றவர்கள்.அவர்களில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது.அந்த இருவருக்கு மட்டுமே தெரியும்.
மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.அமித்ஷா யார் என்பது இப்போது தெரிந்திருக்கும்.என பிஜேபி தலைவர்களையும், காஷ்மீர் பிரிப்பு விவகாரத்தையும் புகழ்ந்து தள்ளியுள்ள நிலையில், நடிகர் விஜய்சேதுபதி,காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்திருப்பது தவறு என சுட்டி காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடியோ இணைப்பு கீழே…