சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அட்டகத்தி, மெட்ராஸ் படத்தை எடுத்த பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கபாலி.
இப்படத்தில் ரஜினிகாந்த் மலேசியாவில் வாழும் தாதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் தொடங்கி நடந்தது.இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக இன்று மலேசியாவுக்கு ரஜினி புறப்பட்டுச் சென்று உள்ளார், இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ”அப்பாவுடன் ஒரு செல்பி எடுத்து கொண்டேன்! அப்பா மலேசியா கிளம்புகிறார் என்ற செய்தியுடன் அந்த புகைப்படத்தை ட்விட்டர் தளத்தில் ஷேர் செய்துள்ளார்.மேலும் மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. கபாலி படத்தின் படப்பிடிப்பை அந்தக் கோவிலில் நடத்த கோயில் நிர்வாகம் சிறப்பு அனுமதியும் கொடுத்துள்ளனராம்.
இதற்கான கையெழுத்திட்ட கடிதமும் ட்விட்டரில் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அங்கே வருகிற 4ம் தேதி தொடங்கி 2 வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. .மலேசியா கிளம்பும் முன் சென்னையில் படமாக்கப்பட்ட கடைசி காட்சி மிக முக்கியமானது. பதற வைக்கும் ஒரு பெரிய நெருப்புக் கலவரம்.. அதில் கபாலி ரஜினி… இந்தக் காட்சியை மட்டும் சென்னையின் முக்கிய ஸ்டுடியோ ஒன்றில் செட் போட்டு எடுத்துள்ளனர்.