கிட்டத்தட்ட பிகில் படத்தின் டாக்கி போர்ஷன் முடிந்து விட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடப்பதாக ஏஜிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருக்கிறார்.
தினமும் 400 பேர் பணியாற்றிய படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததையொட்டி படத்தின் நாயகன் தளபதி விஜய் வழக்கம் போல தொழிலாளர்களுக்கு அன்பின் அடையாளமாக தங்க பிகில் வழங்கி இருக்கிறார்.
அதாவது பிகில் என எழுதப்பட்ட தங்க கணையாழி வழங்கி இருக்கிறார்.
தங்கம் விற்கிற விலையில் மோதிரம் கொடுப்பதே பெரிய காரியம்.