முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . பிரமாண்டமான இப்படத்தை தமிழில் கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.
கலைப்புலி s தாணு அவர்கள் பேசும்போது , “1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை நடிக்க வைத்தேன்.இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக வந்துள்ளது .காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது . கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் ‘கர்ணன்’ தான்.
அர்ஜூன் அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். இயக்குனர் நாகன்னா பிரமாண்டமாக இயக்கி அதிக பொருட்செலவில் முனிரத்னா அவர்கள் தயாரித்த இப்படத்தை தமிழ் வெளியிடுவது மகிச்சியளிக்கிறது . படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும் “என கூறினார்.
நடிகர் அர்ஜூன் பேசும்போது “இந்தப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.நான் விரும்பிய பாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். நான் உழைத்ததை விட தர்ஷன் அதிகம் உழைத்துள்ளார் இந்த படத்தில் . அஜித் படத்தின் 50 வது படத்தில் நான் இருந்தது போல, தர்சனின் 50 வது படத்திலும் நான் நடித்துள்ளேன். படத்தில் நான் நடித்ததை விட வெற்றி பெற்ற ஒரு படத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு பெருமை. கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சி முலம் கிளைமாக்ஸ் கதாயுதம் மூலம் நடக்கும் சண்டை வியக்கத்தக்க அளவில் வந்துள்ளது .இந்தப் படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம், ஏனெனில் இது நம் கலாச்சாரத்தை விவரிக்கும் படம்” என்று கூறினார்.