இப்படி எத்தனையோ தடவை சூப்பர் ஸ்டார் சொல்லிட்டாரு. இவரு கட்சியை ஆரம்பிச்சு ,நடத்தி, அட போங்கய்யா..அவர் இப்படியே சொல்லிட்டு படங்கள்ல நடிச்சிட்டு இருக்கப் போறார்னு என்று சலித்துக் கொள்பவர்கள் சலித்துக் கொள்ளட்டும்.
ஆனா புலி வரத்தான் போகுது.!
இன்னிக்கி பத்திரிகையாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினி தனது பாஜக.ஆதரவு நிலையில் வலுவாக இருப்பதை வெளியிட்டிருக்கிறார்.
மோடி- அமித் ஷா இருவரை பாராட்டிப் பேசியதை நியாயப்படுத்தி கூறி இருக்கிறார்.
“பயங்கரவாதிகளின் இருப்பிடமாக இருக்கிறது.அதை மோடியும்,அமித்ஷாவும் ராஜதந்திரமாக கையாண்டு இருக்கிறார்கள். அதை நான் பாராட்டினேன்.இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை.எதை அரசியல் ஆக்குவது, ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.”என்றவரிடம் அரசியல் பிரவேசம் பற்றி கேட்டார்கள்.