நடிகர்சங்கத் தேர்தல் சமயத்தில், ஓட்டு கேட்க வருகிறோம் என்று அனுமதி கேட்ட இரு அணிகளையும் “வராதீங்க ப்ளீஸ்” என்று கூறிவிட்டார் அஜீத். அதோடு காலில் அடிபட்டிருப்பதாக கூறி,ஓட்டுப்போட வராமல் நடிகர் சங்க தேர்தலையே புறக்கணித்துவிட்டார். என கடும் வருத்தமடைந்த விஷால் அணி. தேர்தலில் பெரிய வெற்றியை பெற்று விட்டதுவெற்றிக்கு பின் முதல் ஆலோசனையே இனி எதிர்காலத்தில் நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால் கூட, நடிகர் சங்கம் சார்பில் அஜீத்தை அழைப்பதில்லை. மற்றும் எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது என்பது தானாம்! இது குறித்து சில இணையதளங்களும் செய்திகள் வெளியிட்டன.இந்நிலையில் இதை உறுதிபடுத்தும் வகையில்,நடிகர் கருணாஸ் தன டிவிட்டரில், ‘நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை,எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது.’ என வெளியிட்டுள்ளார். இது அஜித் தரப்பை ரொம்பவே சூடேற்றியுள்ளதாம்.