ஆள் இல்லாத கட்சியினர் மாநில மாநாடு நடத்திய கதையாகிப் போனது, சிம்பு நடிக்க இருந்த மாநாடு. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் எடுப்பதாக இருந்த மாநாடு தலைவர் சிம்புவின் ஒத்துழையாமையினால் கலைக்கப்பட்டது.
புதிய தலைவரின் தலைமையில் மாநாடு நடக்கும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்.
திடீரென சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் மகா மாநாடு சிம்புவின் கதை வசன இயக்கத்தில் எடுக்கப்பட இருப்பதாக அந்த படத்தின் பி ஆர்.ஓ.வழியாக ஒரு செய்தி வந்தது.சிலர் அதை மெகா மாநாடு என்பதாக சொன்னார்கள்.மகாவோ, மெகாவோ அது வம்புக்கு தீனியாகி இருக்கிறது.
இந்த செய்தியை சிம்புவோ அவரது அப்பாவோ மறுக்கவில்லை. மாறாக ஒரு பெரிய நிறுவனத்தின் வழியாக இணைந்து படம் எடுப்பதற்கான முயற்சி நடந்தது.
இந்த நிலையில்தான் சிம்பு கிரியேஷன்ஸ் எடுக்கவிருக்கும் கதை தன்னுடையது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று புகார் செய்திருக்கிறார்.
இதை மறுத்து தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரான பாக்யராஜிடம் சிம்பு தரப்பினர் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
“கதையைத் தயார் பண்ணிக் கொடுத்துவிட்டுத்தான் சிம்பு வெளிநாடு சென்றதாக “அந்த தரப்பினர் சொல்கிறார்கள்.