எம்மதமும் சம்மதமே!
உண்மையான இந்தியனின் மன நிலை இன்றைய இந்தியாவில் இப்படித்தான் இருக்க வேண்டும்!
ஒரே நாடு,ஒரே தேர்தல் என்பதெல்லாம் நமக்கு பொருந்தாது
வட மாநிலங்களின் கலாசாரம் வேறு.தென்னக மக்களின் கலாசாரம் வேறு வேறு!
நடிகர் மாதவன் அய்யங்கார் பிரிவினை சேர்ந்தவர்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அவரது தந்தை மகனுடன் பூணுல் போட்டிருந்த படம் “.மகிழ்ச்சியான சுதந்திர நாள், ஆவணி அவிட்டம் ,ரக்ஷா பந்தன் நாள் வாழ்த்துகள்”என பதிவிட்டிருந்தார்.
அவரது உரிமை.
இதில் என்ன தவறை கண்டார் ஒரு நேயர் தெரியுமா?
அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குப் பின்னால் உள்ள பூஜை மாடத்தில் ஒரு சிலுவை இருக்கிறது.
இதுதான் அவரது ஆத்திரம்.
“எந்த இந்து கோவிலிலாவது இம்மாதிரி சிலுவையை பார்க்க முடியுமா? மாதவன் நீங்கள் போலி.”
மதவெறி எப்படி எல்லாம் எந்த உருவத்தில் வருகிறது பார்த்தீர்களா?