தெலுங்கில் தேசிய விருது வாங்கிய மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ்ப் படங்களில் நடித்தவர்.படங்களைத் தேர்வு செய்து நடிக்கிற இன்னொரு நயன்தாரா.
நடிகையர் திலகம் சாவித்ரியாக நடித்ததற்காக கிடைத்திருக்கிறது தேசிய விருது.
இவருக்குப் பிடித்த நடிகர்கள்?
“ஹாலிவுட்டில் டாம் குருஸ் ,பாலிவுட்டில் ஷாருக்கான், தீபிகாபடுகோனே,அலியா பட், நயன்தாராவின் டிரஸ் சென்ஸ், சிம்ரனின் டான்ஸ்.பிடிக்கும்”
“காதல் கடிதங்கள்?அனுபவம்?”
“யாரும் லவ் லெட்டர் கொடுத்ததில்ல. காலேஜ்ல படிச்சபோது கூட கொடுக்கல. ஆனா ஒரு கடை திறப்பு விழாவுக்குப் போனபோது ஒரு ரசிகர் பார்சல் கொடுத்தார். அதில் என்னுடைய போட்டோ ஆல்பம் கூடவே ஒரு காதல் கடிதம்.
என் லைப்லேயே கொடுக்கப்பட்ட முதல் லவ் லெட்டர். அதனால அதை பத்திரமா பெட்டகத்தில் வைத்திருக்கிறேன்” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
சூப்பர் மா!
வருங்கால கணவரிடம் காட்டலாம்.!