ட்ரீம் வாரியர் பிலிம்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிற படத்தில் லால்,நெப்போலியன்,யோகிபாபு, ஆகியோருடன் கார்த்தி ,ராஷ்மிகா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் தகவலெதுவும் வெளிப்படாத நிலையில் நடிகை ராஷ்மிகா ஒரு படத்தை வெளியிட்டு சுல்தான் பட ஷூட்டிங்கில் நாலாவது நாள் என குறிப்பிட்டிருக்கிறார். இதனால் படக்குழுவினர் ராஷ் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.