அடிமைப் பட்டுக்கிடந்த நாட்டை சீரமைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
வளரும் நாடுகளுக்கு எந்தெந்த வகையில் இன்னல்கள் வந்து சேரும் என்பதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள். உலகப் பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனா வின் படையெடுப்பை மறந்து விடமுடியாது. எத்தனையோ நெருக்கடிகளைக் கடந்து இந்தியாவை வழி நடத்திய ஜவகர்லால் நேருவை மறந்து விட முடியாது,
அவரின் நாட்டுப்பற்றை சந்தேகிப்பவன் இந்த நாட்டின் உண்மையான இந்தியனாக இருக்க முடியாது.
அவரின் பெயரில் டெல்லியில் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. அந்த பல்கலைக் கழக விழாவில் கலந்து கொண்ட பஞ்சாபி பாடகரும் ,டெல்லி பாஜக எம்.பி.யுமான ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் என்பவர் பல்கலைக்கழகத்தின் பெயரை ‘மோடி நரேந்திரா பல்கலைக்கழகம் ‘ என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதற்கு அவர் சொன்ன காரணம் காஷ்மீர் பிரச்னைக்கு காரணமே காந்தியும் நேருவும்தான் என்கிறார்.
மேலே உள்ள படத்தில் மோடியுடன் இருப்பவர்தான் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ்