‘தண்டர் தைஸ்’ பாலிவுட் ஊடகங்களால் அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீ தேவி.
அவரின் மறைவுக்குப் பின்னர் அவரது மகளான ஜான்வி கபூரின் திரை உலகப் பிரவேசம் நடந்தது. மகளுக்கான புரமோஷன் வேலைகளை அப்பா போனி கபூர் பார்த்துக் கொண்டார்.
ரசிகர்களை எப்படிக் கவர வேண்டும் என்கிற சித்து வேலைகளை பாலிவுட் ஸ்டைலில் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள் .
சீக்கிரமே ஸ்ரீ தேவியின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற எய்ம் அவர்களுக்கு.!
நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு போனிகபூர் தயாரிக்கும் தல 60 படத்தில் ஜான்வி கபூர் நடிக்கப் போகிறார்.
இதை அடுத்து அவர் நடிக்க இருப்பது விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் சூப்பர் ஸ்டார்களில் இவரும் ஒருவர்.இந்த படத்தை பூரி ஜெகநாத் இயக்கப்போவதாக சொல்கிறார்கள்.
தெற்கு நோக்கி படையெடுக்கும் வடக்கு சுந்தரிகளில் ஜான்வி கபூரும் ஒருவர்.