அண்மையில் வெளியான கோமாளி படக் கதை தன்னுடையது. தன் கதையின் கருத்து என உதவி இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி புகார் செய்திருந்தார்.
திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்த இவர் நடிகர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.
புகாரை விசாரித்த சங்கத்தலைவர் இயக்குநர் பாக்யராஜ் அதில் உண்மை இருப்பதாக சொல்லி தீர்ப்பு சொன்னார்.
தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஐசரி கணேஷ் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்து டைட்டில் போடும்போது கார்டு போடுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் அந்த கார்டு படிப்பதற்குள் முடிந்து விடுகிறது.
சங்கம் வெளியிட்ட அறிக்கையில் பாக்யராஜ்க்கு நன்றி தெரிவித்து ,உதவி இயக்குநருக்கு பத்து லட்சம் ஐசரி கணேஷிடம் இருந்து வாங்கிக் கொடுத்ததற்காகவும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.