நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா மூளை காய்ச்சலால் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விவேக். இவருக்கு அருள்செல்வி.என்ற மனைவியும் அமிர்தா நந்தினி, தேஜஸ்வனி ஆகிய இரு மகள்களும், பிரசன்னா குமார் என்ற ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில்
இவருடைய மகன் பிரசன்னா குமார் (வயது 13) மூளை காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தீவிர காய்ச்சலால் கடந்த நாற்பது நாட்களுக்கு மேல் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் இந்நிலையில் . சிகிச்சை பலனின்றி இன்று மதியம் பிரசன்னாவின் உயிர் பிரிந்தது. மகனின் பிரிவைத் தாங்காமல் கோடிக்கனக்கான ரசிகர்களை தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்த விவேக்,மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. திரையுலகினர் பலரும் விவேக்கிற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.