தமிழ்ச்சினிமாவுக்கு பெப்சி எப்படி மிரட்டலோ அதைப் போல பாலிவுட்டுக்கு மேற்கத்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம்.
பின்னணி பாடகர் மிகா சிங் கராச்சியில் உள்ள ஒரு கல்யாண வீட்டில் பாடினார் என்பதற்காக அந்த சங்கம் நோட்டீஸ் விட்டிருக்கிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இதற்கிடையில் சங்கச்செயலாளர் விட்டிருக்கிற அறிக்கையில் “இறுதி முடிவு எடுக்கும் வரை யாரும் மிகாவுடன் வேலை செய்யக்கூடாது ,அது சல்மானாக இருந்தாலும் சரி,”என எச்சரித்திருக்கிறார்.