அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிற படம் சியே ரா நரசிம்ம ரெட்டி. வரலாற்றுப் படம். இந்திய சூப்பர் ஸ்டார் அமீதாப்பச்சன்,சிரஞ்சீவி, விஜய சேதுபதி,சுதீப்,பர்கான் அக்தர்,நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடித்திருக்கிற படம்.
படங்களின் தனித்தன்மையினால் பிரபலமடையவேண்டுமே தவிர தனிப்பட்டவர்களின் பிரபலத்தினால் படத்துக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்பது நயன்தாராவின் கருத்து.
இதனால் அவர் படங்களின் புரமொஷன்களில் கலந்து கொள்வதில்லை என்கிறார்கள்.
அண்மையில் நடந்த மும்பை சியே ரா பட புரமொஷனுக்கு ஜிகு ஜிகுவென வந்து கலந்து கொண்டவர் தமன்னா.நயன் செல்லவில்லை.
படத்தின் ஹீரோயின் நயன் வரவில்லையே என யாரும் கேட்கவில்லை என்றாலும் படக்குழுவினர் “படத்தின் முக்கிய கேரக்டர் சிரஞ்சீவிதான் .முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் வந்திருக்கிறபோது அவர் வராதது குறையாகத் தெரியவில்லை.”என்றார்கள்.
அதுவும் சரிதான்.!