மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு எத்தனையோ ‘சாதனைகள்’ நடந்திருந்தாலும் இந்த மொட்டை சாதனை தனித்தன்மை வாய்ந்தது.
இதுவும் உத்திர பிரதேச மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் நடந்ததுதான். சாய் ஃ பாய் மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு எம்.பி.பி.எஸ்.மாணவர்கள் 100 பேரையும் மொட்டை அடித்து பரேடு சீனியர் மாணவர்கள் பரேடு நடத்தி இருக்கிறார்கள். ஆளும் அரசியல்வாதிகளின் அன்பு புத்திரர்கள்.
இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் கண்முன்னால் மொட்டையாக நிற்பவர்களை பார்த்த பின்னரும் துணை வேந்தர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
“ஒழுக்க கேடானவை ,ராகிங் நடப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், வார்டனில் புகார் செய்தால் கூட போதும்.”என்கிறார்
அப்படியானால் மொட்டை அடித்த மாணவர்கள் அத்தனை பெரும் மோடிக்காக பிரார்த்தனை செய்தவர்களா?