“கல்யாணம் ஆகப்போகுதுங்கிற அர்த்தத்தில பிரேம்ஜி அமரன் போட்ட டிவிட்டரும் டீ சர்ட்டும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
நீண்டகால கன்னி மனுஷன் காப்பாற்றப்பட்டார்ங்கிற மகிழ்ச்சி.
ஆனா இன்னிக்கு நடந்த ஜாம்பிக்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரேம்ஜி அமரன் ‘மொரட்டு சிங்கிள் ‘என்கிற டீ சர்ட்டுடன் ஆஜர்.
எல்லோருக்கும் ஷாக் !
என்னடா இந்த மனுஷனுக்கு என்னாச்சு…இந்த கல்யாணம் புட்டுக்கிச்சா?
இப்படித்தான் தோணுச்சு!
இதுக்கு அந்த மனுசனே பதில் சொல்லிட்டார்.
“அப்படி கல்யாணம் கட்டிக்கிற மாதிரி சொல்லல. நான் இன்னும் மொரட்டு சிங்கிள்தான்.” என்றவர் “எப்பவுமே சிங்கிள்தான்”என்றதுதான் குழப்பத்தின் உச்சம்.
அப்படியானால் ‘நித்தியபிரம்மச்சாரியா?’
இந்த விழாவில் இயக்குநர் பொன்ராம் ஒரு உண்மையை போட்டு உடைத்தார்.
எதிர்கால சினிமா எப்படி இருக்கும் என்கிற உண்மையை!
“எதிர்காலத்தில் டிஜிட்டல் சினிமாவைப் பார்க்கும் நிலை வரும்.அதை வரவேற்கும் மனப்பான்மை நமக்கு வேண்டும்.!”
யாரும் செல்போனில் படம் பார்க்காதீர்கள் என்று சொன்ன டி.வி.காமடியனுக்கு செவிட்டில் விட்டது போன்று இருந்திருக்கும்.