நடிகை சுஜா வருணிக்கும் அவரது நீண்ட நாள் காதலரும், நடிகர் சிவாஜிகணேசனின் பேரனுமாகிய சிவக்குமாருக்கும் கடந்த நவம்பர் 19ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணமான ஒரு சில மாதங்களில் சுஜா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டார். இந்த நிலையில், கடந்த 19ம் தேதி சுஜா வருணி மகப்பேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது கணவர் சிவக்குமார் தகவல் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று மாலை சுஜா வருணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிவாஜி தேவ் என்ற சிவக்குமார் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கடைசியில் பையன். என்னுடைய சிம்பா வந்துவிட்டான்.
விரைவில் உங்களை எல்லாம் பார்ப்பான். இந்த நாள் என்னுடைய மறக்க முடியாத நாள். ஏனென்றால், இந்த நாளில் தான் நான் நடித்த வெப் சீரிஸ் ஃபிங்கர்டிப் மறுபடியும் ஜீ5ல் ஒளிபரப்பானது.
இன்றைய நாளில் எனது மகன் இந்த உலகிற்கு வந்துவிட்டான் என புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார் .