வந்த செய்தியைப் பார்த்த போது குப்பென வியர்த்தது.
பாரதமாதாவின் புதல்வர்களா இப்படி செய்தார்கள் என்கிற ஆச்சரியம் ரத்தநாளங்களில் அலையடித்தது.
வடக்கே கர்னல் ரயில் நிலையம்.
ஒரு மூதாட்டி ரயிலுக்காகக் காத்திருக்கிறாள் .54 வயது.
“அம்மா” என ஒரு குரல் .
தடியான ஆள். ” சாப்பாடு கொண்டாந்தோம் .நிறைய இருக்கு. வீணாக்க விரும்பல.சாப்ட வரீங்களா?” என அழைக்கிறான்.
பணிவும் பேசிய தோரணையும் அந்த மூதாட்டியால் சந்தேகப்பட முடியவில்லை.
எழுந்து போனாள். அருகில் இருந்த ஒரு ஷெட்டில் 7 பேர் இருந்தனர்.
இப்போதுதான் சந்தேகம் வருகிறது.
திரும்பி விரைந்து நடக்க ஆரம்பித்ததும் ‘மடேர் ‘ என அடி .எட்டு மனித ஓநாய்களும் அந்த மூதாட்டியை வீழ்த்தி ஒவ்வொன்றாக உடல் வேட்கையை தீர்த்துக் கொண்டன.
தளர்ந்து கிடந்த அந்த கிழவியை போகிற போக்கில் ஒருவன் இரும்புத்தடியால் ‘ தட்’ என தாக்கி விட்டு நடக்கிறான்.
காயம் பட்ட அந்த மூதாட்டியால் எழுந்து நடக்க இயலவில்லை.தவழ்ந்தும் நகர்ந்தும் சென்று போன் பூத்தை அடைந்து போலீசை அழைத்தாள்.
தற்போது சண்டிகார் மருத்துவமனையில்.!