“எப்.ஐ.ஆரில் பேரே இல்லை ,என்னை கைது செய்திருக்கிறார்கள்” என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கதறுகிறார்.
இன்னொரு பக்கம் ” நீ குத்தமே செய்யல.இன்னசன்ட், உனக்கு விடுதலை” என சொல்லி 21 வருஷம் ஜெயிலில் இருந்த சாது பிரதான் என்பவரை ஒரிசா உயர் நீதி மன்றம் விடுதலை செய்திருக்கிறது.
என்னங்கய்யா உங்க நீதியும் நியாயமும் ?
சாது பிரதான். கிராமத்து ஆள். 1997 -ஆம் வருஷம் ஒரு பொண்ணை போட்டுத்தள்ளிட்டார்னு சொல்லி கைது செய்து வழக்கு நடந்தது. மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு “இந்த ஆளு .குத்தம் பண்ணி இருக்கான் கொலை செஞ்சிருக்கான். ஆயுள்தண்டனை”ன்னு சொல்லி ஜெயிலுக்கு அனுப்பி விட்டது.
சாது விடலை. ஒரிசா ஹைகோர்ட்டுக்குப் போனார் .
பெஞ்ச் விசாரணை.
“டிரெய்ல் கோர்ட்டு சரியா விசாரணை நடத்தல தப்பு பண்ணிருக்கு. சாது இன்னசன்ட்.அவனை உடனே விடுதலை செய்”னு உத்திரவு.
இது என்ன சிஸ்டம்? அந்த 21 வருஷம் வாழ்க்கையை தொலைச்சிருக்கானே உங்க சட்டத்தால! அதுக்கு என்ன பரிகாரம்?
இதைத்தான் ‘ராம ராஜ்ஜியம் ‘னு காந்தி சொன்னாரா?