இப்பல்லாம் பாக்யராஜ்தான் சினிமா பங்ஷன்களுக்கு நிலைய வித்வான் !
தொடர்ந்து வர்றார். படங்களிலும் நடிக்கிறார். விமர்சனமும் பேசுறார். எழுத்தாளர் சங்க தலைவர் வேலையையும் பார்க்கிறார்.
பிசியான ஆளுதான். ஆனா எப்படி விழாக்களுக்கு வந்து மூணு மணி நேரம் அவரால் தொடர்ந்து உட்கார முடியிது. அதுவும் இவர்தான் கடேசிப் பேச்சாளராக இருப்பார்.
மத்தவங்க அறுப்பதை எல்லாம் வாங்கிட்டு உக்காந்துதான் இருக்கணும்.
அதிலும் சில தொகுப்பாளர்கள் அல்லது தொகுப்பாளினிகள் தங்களின் வாய் ஜாலம் காட்டுகிற மேடையாகத்தான் சினிமா விழா இருக்கு.
சரி பாக்யராஜ் மாதிரி பொறுமைசாலிகள் கிடைச்சிருக்காங்க. வெயிட் பண்ண வைக்கலாம் எல்லாமே தாங்குவாரு.
அண்மையில் கோலா பட பங்சன் நடந்தது. எவ்வளவோ பேர் பேசுனாங்க.
ஆனா பாக்யராஜ் பேச்சுதான் தைலாபுரம் தோட்டத்துக்கு கேக்கிற அளவுக்கு இருந்தது.
அவர் என்ன பேசுனார்னா…..
“எனர்ஜி என்பது வயசு சம்பந்தப்பட்டது அல்ல மனசு சம்பந்தப்பட்டது. சேவிங் பண்ண வந்த ஒரு ரவுடி அந்த கடைக்காரனிடம் அறுப்பு இல்லாமல் செய்தால் தான் விடுவேன். இல்லைன்னா வெட்டிடுவேன் என்றானாம்
அனைவரும் பயந்தார்கள்..
ஒரு சிறுவன் தைரியமாக செய்தான். அந்த ரவுடி ஆச்சர்யப்பட்டு சிறுவனிடம் “உனக்குப்பயம் இல்லையா”ன்னு கேட்டான்.
அதற்கு சிறுவன் சொன்னான், ” நீங்கள் வெட்ட அருவாள் எடுக்கிறதுக்கு முன்னாடியே நான் என் கையில் இருக்கும் கத்தியைப் பயன்படுத்தி விடுவேன்” னான்
. ஆக துணிச்சலுக்கும் வயசுக்கும் கூட சம்பந்தமில்லை
கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார்.
நானே கஞ்சா நெறைய குடிச்சிருக்கேன்!
சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள்.
சில நேரங்களில் கஞ்சா நல்லவே வேலை செய்யும்.
ஒருநாள் அது கிர்ர்னு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம்.