ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கம்பீரமாக வெளிவரவிருக்கிறது. இந்த நிலையில் எந்திரன் 2 படத்துக்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. கபாலி வெளியான கையோடு, எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.டிசம்பர் வரை கபாலி படப்பிடிப்பு நடப்பதால், 2016-ம் ஆண்டு ஜனவரியில் எந்திரன் 2 தொடங்குகிறது. எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அர்னால்ட் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. நாயகிகளில் ஒருவர் எமி ஜாக்ஸன். மேலும் ஒரு பிரபல நடிகையும் படத்தில் உண்டு. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 3டி மற்றும் 2டியில் படம் உருவாகிறது. 2016-ம் ஆண்டு தொடங்கும் எந்திரன் 2 படப்பிடிப்பு வரும் 2017-ல் முடிவடைகிறது. அதே ஆண்டு இறுதிக்குள் அல்லது 2018 ஆண்டு பொங்கல் தினத்தில் எந்திரன் 2ஐ வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.