பில்லி சூன்யம்,காத்து கருப்பு, செய்வினை இதெல்லாம் அறியா மக்களின் நம்பிக்கைன்னுதான் நினச்சிட்டிருந்தோம்.
ஆனால் சட்டமியற்றும் பாஜகவுக்கே அந்த நம்பிக்கை இருக்கிறது!
“பாபுராவ்,கவுர்,சுஜ்மா ஸ்வராஜ்,அருண் ஜெட்லி ஆகியோரின் மரணத்துக்கு எதிர்கட்சிகளே (காங்கிரஸ் )காரணம்.தீய சக்திகளை ஏவி விட்டிருக்கிறார்கள் “என்று பா.ஜ.க. பார்லிமென்ட் உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் சொல்லி இருக்கிறார்.
“பா.ஜ.க.வை சேர்ந்த கடினமான உழைப்பாளிகள், கட்சியை கையாளும் தலைவர்களை பாதிக்கும் வகையில் கடுமையான தீங்கு விளைவிக்கும் தீய சக்திகளை எதிர்கட்சிகள் பயன் படுத்துகின்றன.கவனமாக இருங்க என்று சுவாமிஜி என்னிடம் சொல்லியிருக்கிறார்.ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்” என சொல்லி இருக்கிறார் சாத்வி,!