பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி.
அதாவது மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து ஆடிப்பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி.கும்மி அடிப்பது மாதிரி தெரியுதா படத்தைப் பார்த்ததும்!
இதுக்குப் பெயர்தான் மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ். ஹவுஸ் ஓனர் அப்ஜெக்ஷன் பண்ணாம இருந்தா சரி.!
சென்னை சத்தியம் அரங்கு இந்த மொட்டை மாடிக் கலைஞர்களுக்கு தளம் அமைத்துத் தந்திருக்கிறது.
இந்த இசை குழுவின் சிறப்பம்சமே பார்வையாளர்களையும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கச் செய்து, அவர்களையும் பாட வைப்பதுதான். சத்தியம் திரையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கென பிரத்யேகமாக ஒரு ஆப் வடிவமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து நிகழ்ச்சியில் பாடல்களைப் பாடி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றது, அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான இசை அனுபவத்தைத் தந்தது.