இயக்குனர் சுந்தர்.சி, விஷால், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோரது நடிப்பில் ‘மத கஜ ராஜா’ படத்தை இயக்கினார்.படம் முடிந்து பல காலம் ஆகியும் தயாரிப்பாளரின் கடன் பிரச்சனையால் படம் வெளியாவது அப்படியே முடங்கிப் போனது. இதையடுத்து நடிகர் நடுவில் விஷாலும் தனது சொந்தப் பணத்தில் படத்தை வெளியிட முயற்சி செய்தும் நடக்கவில்லை. இதற்கிடையே தற்போது தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராக நடிகர் விஷால் வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில், மத கஜ ராஜாவின் தயாரிப்பாளர்கள் கடனை செட்டில் செய்து மத கஜ ராஜாவை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தீபாவளிக்குப் பிறகு மத கஜ ராஜா படம் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.