இவர் வாயைத் திறந்தால் யார் வறுபடுவார் என்பதை சொல்ல முடியாது. கருகிப்போவார்கள்.
அந்த அளவுக்கு வாயில் தீக்கங்கு !
அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி,நயன்தாரா இருவரும் சீமானின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கூடவே அத்திவரதரும் ,ஏழுமலையானும் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சீமான் என்ன பேசி இருக்கிறார் தெரியுமா?
“அத்திவரதர்,அத்திவரதர்னு எல்லா தொலைக்காட்சிகளிலும் அத்திவரதர் மயமாகவே இருந்தது.
ஆனா கடேசியா நயன்தாராவும்,ரஜினியும்,’குட் பை ‘சொல்லி அனுப்பி வச்சிருக்காங்க.இவ்வளவு நாள் பெருமைக் குரியவராக இருந்த அத்திவரதரை எவ்வளவு சிறுமைப் படுத்தி இருக்கிங்க.
இது எவ்வளவு பெரிய கொடுமை!
ஆனா ஒரே ஒரு மகிழ்ச்சி!அத்திவரதரால் வெங்கடாசலபதியின் மார்க்கெட் போச்சு!
48 நாட்களில் நம்ம அத்திவரதர் அடிச்சிட்டார் திருப்பதியை!
ரஜினிகாந்தை வீழ்த்தி தம்பி விஜய் வர்றது மாதிரி.
இதுவும் நமக்குப் பெருமைதானே!”
இனி தளபதி ரசிகர்களுக்கு சீமான் செல்லப்பிள்ளை.!