வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது,
“எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறியபடம் பெரியபடம் என்றில்லை. எல்லோரும் ஒரே போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி மிகவும் சிக்கலாக இருக்கிறது. ” என்றார்
ஆர்.வி உதயகுமார் பேசியதாவது,
” நாங்களும் நிறைய விசயங்களைப் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் தீர்வு கிடைக்க மாட்டேன்கிறது.
நல்லவனா கெட்டவனா என்றால் இந்த மேடையில் யாருமே இருக்க முடியாது. சினிமா என்பது மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஊடகம்.
அப்படியான சினிமாவில் சிஸ்டம் சரியில்லை. சிஸ்டம் சரி செய்கிறேன் என்று வருபவர்கள் கூட திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பத்துவதை விட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம்.
இப்பவும் சொல்றேன் பெரிய சம்பளம் வாங்கும் நாலு நடிகர்கள் ஒண்ணா உட்கார்ந்து பேசினாலே சினிமாவில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடும்.
தியேட்டரில் இருந்து வரும் டிக்கெட் ஷேரை விட பாப்கார்ன் காசிலும் நமக்கு பங்கு வந்தால் சிறுபட தயாரிப்பாளருக்கு வருமானம் வரும். தமிழ்சினிமாவில் தான் நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்கிறார்கள்.
இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது.
ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர். அவரை எல்லாம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைத்தால் வருவார். ” என்றார்
இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசியதாவது,
திரைப்பட சங்கங்களில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பலரும் பேசினார்கள். எனக்குப் பேசிப்பேசி அலுத்துவிட்டது.
நாங்கள் படம் எடுத்த காலங்களில் தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தார்கள். உழைக்கிற எல்லாருக்கும் சரியான கூலி கொடுத்தால் பிரச்சனை இல்லை.
இந்தத் திரைப்படத்துறையை யாராலும் அழிக்க முடியாது. அதேநேரம் இந்தத் திரைப்படத்துறையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
மக்களால் அங்கீகாரம் பெறப்பட்ட படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. படங்களுக்கு பெரிய எதிரி இண்டெர்நெட் தான். ” என்றார்