“சார் கண்ணாலம் நின்னு போச்சாம்!?”
விஷால் –அனிஷா அல்லா ரெட்டி நிச்சயதார்த்தம் முடிஞ்சி ரெண்டு பேரும் ஜோடியா போட்டோவெல்லாம் போட்டு சிரிச்சாங்களே, அவங்க கல்யாணமா நின்னு போச்சு?
டோலிவுட் கோலிவுட் ரெண்டு உட்டுமே பரபரப்பு பூமியாகிப் போச்சு.
விஷாலோ,அனிஷாவோ எந்த வித சலசலப்பும் காட்டல. மறுப்பும் காட்டல.
இன்னிக்கி விஷாலுக்கு 43 வயசு.
டிவிட்டர் பக்கத்தில அனிஷாவின் வாழ்த்து செய்தி.
- “பிறந்த நாள் காணும் நட்சத்திரமே,
- நீ ஜொலிக்க பிறந்த ஆள்யா!
- எப்பவுமே நீ அழகன்தான்!
- அன்பே,
- எல்லாப் பெருமையும் தேடி வரும்!
- நம்பிக்கையுடன் இருக்கேன்.
- என்றும் அன்புடனே!
என சிலிர்த்திருக்கிறார் அனிஷா.
சரி இதுக்கு மீனிங் என்னாங்கிறே, கல்யாணம் நடக்கும்னுதானே அர்த்தம்?
அப்படியும் வெச்சுக்கலாம்.
ரெண்டு பேரும் சேர்ந்து புதுசா படம் எடுத்துப் போட்டா நல்லாருக்கும்.
விஷாலுக்கு சினிமா முரசத்தின் பிறந்த நாள் வாழ்த்துகள்.