The Queen #Sivagami @meramyakrishnan has arrived to #BiggBossTelugu3 as special host 👑👁️
Watch her tonight at 9 PM on @StarMaa pic.twitter.com/iWq7PTyibv
— STAR MAA (@StarMaa) August 31, 2019
தமிழ்நாட்டில் பிக்பாஸ் உலகநாயகன் கமல்ஹாசன்.
தெலுங்கு தேசத்தின் பிக்பாஸ் நாகார்ஜூனா. சமந்தாவின் மாமனார்.
இவர் தேசாந்திரமாக வெளிநாடு செல்வதால் பிக்பாசை தொகுத்து வழங்குவதற்கு ஆள் தேவைப்படுகிறது. அனேகமாக அந்த நிலைமை தமிழ்நாட்டுக்கும் தேவைப்படலாம்.
ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேப் பில் நடக்கிறது. அதில் இன்னமும் தாத்தா கமல் போர்ஷன் எடுக்கப்படவில்லை. விவேக் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது புதிய செய்தி.
இதுவரை கமலின் படத்தில் விவேக் நடித்ததில்லை.
இதனால் விவேக் கோபம் அடைந்தது உண்டு. இவர் கதாநாயகனாக நடித்த படம் கமலின் பாபநாசத்தினால் தியேட்டர் கிடைக்காமல் நட்டம் அடைந்ததாக தவறான தகவலை சொன்னது நினைவிருக்கலாம்.
தற்போது கமலின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சரி மேட்டருக்கு வரலாம்.
நாகார்ஜுனா வெளிநாடு செல்வதால் தெலுங்கில் பிக்பாசை தொகுத்து வழங்குகிற வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதைப் போல கமல்ஹாசன் தாத்தா கேரக்டரில் நடிப்பதற்கு சென்று விட்டால் வேறு பிரபலம் தேவைப்படலாம்.