சித்தார்த்,ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிற படம் சிவப்பு,மஞ்சள் ,பச்சை படத்தை இயக்கி இருக்கிறார் பிரபல இயக்குநர் சசி.இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பர் முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்ததாம்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால் அங்கு சென்றால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது என்கிற தகவல் காத்திருந்தது.
என்ன காரணமாம்?
சிவப்பு மஞ்சள்,பச்சை படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுவிட்டதால் இசை வெளியீட்டு விழா வேறு தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இதற்கு காரணம் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கிற எனை நோக்கிப் பாயும் தோட்டா செப்.முதல் வாரம் ரிலீஸ் ஆகிறது