கலைக்குடும்பம்னா கோலிவுட்ல விஜயகுமாரைத்தான் சொல்வாங்க. அவரு,இறந்து போன மனைவி மஞ்சுளா ,மகன் அருண் குமார் ,மற்றும் அவரது பொண்ணுங்க இப்படி எல்லாருமே சினிமாவில்தான் இருக்காங்க.
அதனால கலைக்குடும்பம்.!
இப்ப இன்னொரு கலைக்குடும்பம்னு ஏழெட்டுப் பேர் படங்களைப் போட்டு ரவுண்ட்ல விட்ருக்காங்க.ஆனா விட்ட வேகத்திலேயே அந்த படம் ரிட்டர்ன் ஆகிடுச்சு.
“என்னோட படத்தின் போஸ்டரை ஒட்டிட்டு அந்தப் பக்கம் போனா அந்த போஸ்டரை கிழிச்சிட்டே போன அந்த வேதாளத்தை எப்படி மறக்க முடியும்? இந்த புதிய போஸ்டரை விட்டது யார்? தூண்டி விட்டது யாருங்கிறது எங்களுக்குத் தெரியாதா என்ன?” என்று ஒரு புகழ் பெற்ற நடிகரின் உறவுகள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.